கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் பாண்டியராஜன். தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
இதனையடுத்து, கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க ஆறு நாட்கள் ஆனது. எனவே இந்த விவகாரத்திலும் அவர் சர்ச்சையில் சிக்கினார். எனவே, இந்த இரண்டு வழக்குகளையும் சரிவர விசாரிக்காத பாண்டியராஜனை உடனடியாக பணியிட மாற்றம் செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கோவை எஸ்.பி பாண்டியராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் எங்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிவிக்கப்படவில்லை. இதனையடுத்து கோவை மாவட்ட எஸ்.பியாக சுஜித் குமார் பொறுப்பேற்க உள்ளார்.