கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 'வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்தது ஏற்கத்தக்கது அல்ல. வேலூரில் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா நடக்கும் போது கையும், களவுமாக பிடித்ததாக எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. வேறு சில தொகுதிகளிலும் பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், மற்ற இடங்களுக்கு இந்த முடிவு பொருந்தாதா? எனவே வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது உள்நோக்கம் கொண்டது.
தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுவது கண்டனத்துக்குரியது. ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில், எதிர்கட்சியினர் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது, தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக செயல்படுகிறது' என ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.