ETV Bharat / city

மரத்தில் மோதிய கார், 4 இளைஞர்கள் உயிரிழப்பு! - car accident death in coimbatore

கோயம்புத்தூர்: கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

மரத்தில் மோதிய கார்
மரத்தில் மோதிய கார்
author img

By

Published : Aug 7, 2020, 8:45 AM IST

கோயம்புத்தூர் தடாகம் காளையனூரில் இன்று அதிகாலை மரத்தின் மீது கார் மோதி விபத்துகுள்ளானது. இதில் நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த தடாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மரத்தில் மோதிய கார்

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் இந்திரேஸ்(22), கார்த்திக் ராஜு(22), மோகன் ஹரி(23), மணிகண்டன்(22) என்பது தெரியவந்தது.

காரில் வந்த மற்றொரு இளைஞரான பிரதேஸ்(23) பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதையும் படிங்க: செல்போன் டவர் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.