கோயம்புத்தூர்: காரமடை அடுத்த கண்ணார்பாளையம் - மத்தம்பாளையம் செல்லும் சாலையில் தெற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் கோவை பூ மார்கெட் பகுதியில் பூ மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் தனது வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். அதேபோல் நேற்றிரவும் (மே.17) பணி முடிந்து வீட்டிற்கு வந்த அவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று (மே.18) காலை எழுந்த அவருக்கு தனது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இதனால் அருகில் உள்ள வீட்டின் சிசிடிவி மேமரா காட்சியை அவர் பார்த்துள்ளார்.
அப்போது அங்கு வந்த சிறுவன் அதிகாலை 01.40 மணியளவில் இருசக்கர வாகனத்தை அசைத்து பார்த்து பெட்ரோல் உள்ளதை உறுதி செய்தார். பின்னர் லாவகமாக சப்தமில்லாமல் அதை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.
இதனையடுத்து மோகன்ராஜ் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் சிறுவனை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மெரினாவில் சட்டவிரோதமாக சாராயம் விற்ற மூன்று பெண்கள் கைது