ETV Bharat / city

ப்ரிபயர் கேம் விளையாட செல்போன் தராததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை - ப்ரிபயர் கேம் விளையாட செல்போன் தராததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

பொள்ளாச்சியில் ப்ரிபயர் கேம் விளையாட செல்போன் தராததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
author img

By

Published : Apr 13, 2022, 8:40 AM IST

Updated : Apr 13, 2022, 9:34 AM IST

கோயம்புத்தூர்: கிணத்துக்கடவு அருகே உள்ள கண்ணப்பன் நகரைச் சேர்ந்தவர்கள் பழனி, கிட்டனம்மாள் தம்பதி. இவர்களுக்கு 3 மகள்கள், ஈஸ்வரன் (13), அர்ஜூனன் (12) ஆகிய 2 மகன்கள் என மொத்தம் 5 பேர் உள்ளனர். இதில் சிக்கலாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஈஸ்வரன் 8ஆம் வகுப்பும் அர்ஜூனன் 6ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.

இருவரும் அடிக்கடி செல்போனில் ப்ரிபயர் கேம் விளையாடுவது சம்பந்தமாக சண்டை போட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 11) பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய இருவரும் ப்ரிபயர் கேம் விளையாட செல்போன் கேட்டு சண்டை போட்டனர். ஈஸ்வரன் செல்போன் தராததால் கோபமடைந்த அர்ஜூனன் வீட்டின் ஜன்னலில் தூக்குபோட்டுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய நிலையில் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அர்ஜூனன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் கோர விபத்து- கர்ப்பிணி காவலர் உயிரிழப்பு!

Last Updated : Apr 13, 2022, 9:34 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.