ETV Bharat / city

கோவை அருகே லஞ்சம் பெற்ற ஊராட்சி தலைவி கைது

கோவை அருகே கட்டட வரைபட அனுமதிக்காக லஞ்சம் பெற்ற ஊராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 8, 2022, 2:28 PM IST

கோவை: பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிளிச்சி ஊராட்சி வேலன் நகரில் கார்த்திக் என்பவர் தனது மனைவி பூர்ணிமா பெயரில் வாங்கிய இரு மனையிடங்களுக்கு கட்டட வரைபட அனுமதி கோரி ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணமாக ரூ.21,092 செலுத்தியுள்ளார். குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் கார்த்திக் ஊராட்சி தலைவரான சாவித்திரியிடம் பிளான் அப்ரூவல் குறித்து கேட்டபோது, தனது கணவர் ராஜனிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே கட்டட வரைபட அனுமதி வழங்க இயலும் என சாவித்திரி தெரிவித்துள்ளார்.

பிளிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம், கோவை மாவட்டம்

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக், பணம் தர இயலாது எனக் கூறவே, ரூ.15 ஆயிரம் கொடுங்கள் என கேட்டுள்ளார். இதையும் தர மறுத்தால் பிளான் அப்ரூவல் வழங்க இயலாது என ஊராட்சி தலைவர் சாவித்திரியும் அவரது கணவரான ராஜன் என்பவரும் கார்த்திக்கிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்புதுறையில் கார்த்திக் அளித்தப் புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கார்த்திக்கிடம் ரூ.15 ஆயிரத்தை கொடுத்து ஊராட்சி அலுவலகத்திற்கு அனுப்பினர்.

அலுவகத்திற்குள் சென்ற கார்த்திக்கிடம் இருந்த ஊராட்சி தலைவர் சாவித்திரியிடம் லஞ்ச பணத்தைக் கொடுத்தபோது, அதனை அருகில் இருந்த அவரது கணவர் ராஜன் பெறவே, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஊராட்சி தலைவி சாவித்திரி மற்றும் அவரது கணவர் ராஜனை கைது செய்தனர்.

மேலும், ஊராட்சி அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட ஊராட்சி தலைவர் சாவித்திரி அப்பகுதி அதிமுக மகளிர் அணி தலைவராகவும், இவரது கணவர் ராஜன் அதிமுக கிளை செயலாளராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரசு பள்ளிக்குள் சமாதி (மசார்) கட்டிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.