கோவை: வால்பாறை அருகே உள்ள தாய் முடி எஸ்டேட்டில் வசிப்பவர் பெரியசாமி (66). இவர் முடீஸ் பகுதியிலுள்ள டாக்டர் சர்மா பங்களாவில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
வழக்கம்போல இன்று பணிக்குச் சென்றிருந்தபோது, அங்கு வந்த கரடி அவரைத் தாக்கியுள்ளது.
வலி தாங்கமுடியாத முதியவர் சத்தம்போட்டு அலறியுள்ளார். உடனே அந்தக் கரடி அவரை விட்டுவிட்டு அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்குள் ஓடியது.
![வால்பாறையில் கரடி தாக்கி முதியவர் படுகாயம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02:56:23:1624958783_tn-cbe-02-valpari-beer-attack-pho-tn10008_29062021135437_2906f_1624955077_803.jpg)
இதனையடுத்து அங்கு சென்ற பொதுமக்கள், காயம் அடைந்த முதியவரை மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். அவருக்கு இடதுகையில் 27 தையல் போடப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் ஆரோக்கிய ராஜ் சேவியர் உத்தரவை தொடர்ந்து, கரடியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.