ETV Bharat / city

திறக்கப்பட்ட பில்லூர் அணை; நீரில் மிதக்கும் வாழைத்தோட்டங்கள் - Bhavanisagar Dam

மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணையிலிருந்து பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரி நீர் சிறுமுகை, லிங்காபுரம் பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டங்களில் தேங்கியதால் சுமார் 3000-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை உள்ளடக்கிய வாழைத்தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 11, 2022, 4:00 PM IST

கோவை: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால், பில்லூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.நேற்றைய நிலவரப்படி 12 ஆயிரம் கன அடி நீர் பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. ‌இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உயர்ந்துள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை, காந்தவயல், ஆலங்கொம்பு உள்ளிட்ட இடங்களில் பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள 3000-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை உள்ளடக்கிய வாழைத்தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பு - நீரில் வாழை மரங்கள் அழுகும் நிலை

மானாவாரி பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் இழப்பீடுகோரி உள்ளனர். பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல் செல்லும் உயர்மட்ட பாலம் நீரில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.