ETV Bharat / city

கோவையில் பயணிகள் நேரத்தை பயனுள்ளதாக்க 'ஆட்டோ நூலகம்' தொடக்கம் - library on wheels

கோவையில் முதல்முறையாக "லைப்ரரி ஆன் வீல்ஸ்" என்ற பெயரில் ஆட்டோ நூலகத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

கோவையில் பயணிகள் நேரத்தை பயனுள்ளதாக்க ’ஆட்டோ நூலகம்’ தொடக்கம்

author img

By

Published : Oct 7, 2022, 10:23 PM IST

கோயம்புத்தூர்: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தங்களது நேரத்தை சமூக வலைதளங்களில் வீணடித்து வருகின்றனர். இதனைக்குறைத்து மக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் முயற்சியாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் "லைப்ரரி ஆன் வீல்ஸ் " என்ற பெயரில் ஆட்டோ நூலகத்தை தொடங்கி வைத்தார்.

தனியார் அறக்கட்டளையின் ஆட்டோ நூலகம் மற்றும் பொதுமக்கள் புத்தகம் அன்பளிப்பாக வழங்க பெட்டி ஆகியவற்றைத் தொடங்கி வைத்த அவர், இதன் தொடக்கமாக பயணிகளுக்கு பயன்படும் வகையில் தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள், தினசரி நாளிதழ்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் சையது என்பவரது ஆட்டோவில் அமர்ந்து புத்தகம் படித்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணனன், “பயணிகள் நலன் கருதி, வாசிப்புத்திறனை அதிகரிக்க மாநகரம் முழுவதும் இரண்டாயிரம் ஆட்டோக்களில் மினி நூலகம் அமைக்கப்படும். மாதம்தோறும் இந்த புத்தகங்கள் மாற்றப்படும். இந்த முன்னெடுப்பு குற்றங்களை குறைக்கவும் உதவும். கால் டாக்ஸிகளிலும் இதுபோல நூலகம் தொடங்க முயற்சி செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

கோவையில் பயணிகள் நேரத்தை பயனுள்ளதாக்க 'ஆட்டோ நூலகம்' தொடக்கம்

முன்னதாக, புத்தக வாசிப்பை மேம்படுத்துவதற்காகவும் காவலர்களின் மன இறுக்கத்தைப் போக்கும் வகையிலும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் காவல் நிலையங்களில் நூலகங்களை கடந்த சில தினங்களுக்கு முன்தொடங்கி வைத்தார். இது காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தக்ஷிண் சித்ராவில் இருந்த சோழர் காலத்து சிலைகளை மீட்ட சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.