தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய- மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அரசு, தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொள்ளாச்சி கோமங்கலம் காவல் நிலையம் சார்பில் உடுமலை - பொள்ளாச்சி சாலையில் உள்ள கெடிமேடு பகுதியில் கரோனா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமாறன் கரோனா போன்று வேடமிட்டு முகக் கவசம் அணியாதவர்களை பிடித்து முகக் கவசம் கொடுத்தார்.
அவ்வழியாக வந்த பேருந்து, கார், இருசக்கர வாகனம் போன்றவற்றில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முகக் கவசங்களை அணிய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், கரோனா வைரஸால் ஏற்படும் நோயின் அறிகுறிகள் குறித்தும் நோய் பரவும் முறை குறித்தும் விளக்கினார்.