கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் பஜ்ரங்தள் என்ற அமைப்பில் செயலாளராக இருந்து வருகிறார். இவர் சமூக வலைத்தளத்தில் இரு மதங்களிடையே மோதல் ஏற்படும் வகையில் பதிவுகளை பதிவிடுவதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் செல்வபுரம் காவல் நிலையத்திற்கு தெரிய வர சதீஷ் குமாரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரின் மீது மதங்களிக்கிடையே மோதல் ஏற்படுத்துதல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.