கோவை: பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க இருக்கும் அண்ணாமலை, சாலை மார்க்கமாக சென்னை செல்வதை பாஜகவினர் உற்சாகப்படுத்தினர்.
ஆண்டவனே நம்ம பக்கம் - அண்ணாமலை பஞ்ச்! பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக அண்ணாமலை வருகின்ற 16ஆம் தேதியன்று சென்னை கமலாலயத்தில் பொறுப்பேற்க உள்ளார். இதற்காக இன்று கோவையில் இருந்து சென்னை வரை சாலை மார்க்கமாக செல்ல முடிவெடுக்கப்பட்டது. எனவே இன்று கோவையில் இருந்து பயணத்தை தொடங்கிய அவர், தண்டுமாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பயணத்தை தொடங்கினார். அவருக்கு வ.உ.சி மைதானத்தில் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட பாஜக தொண்டர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும், கும்ப மரியாதை செய்தும் வழியனுப்பி வைத்தனர். ஆண்டவனே நம்ம பக்கம் - அண்ணாமலை பஞ்ச்! அப்போது தொண்டர்களிடையே பேசிய அவர், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் போது தமிழ்நாட்டில் பாஜக ஒரு மாற்று சக்தியாக இருக்கும். நாடாளுமன்றத்திற்கு தமிழகத்தில் இருந்து அதிகமான எம்பிக்கள் செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் ஆண்டவனே நம்ம பக்கம். கோயம்புத்தூர் நாட்டுக்காக பல உயிர்களை கொடுத்த ஊர். நம்முடைய உண்மையான காரிய கர்த்தாக்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். கோயம்புத்தூர் காத்து கொண்டிருக்கிறது. பாஜகவில் இருந்து எம்.எல்.ஏ வேண்டும் எம்பிக்கள் வேண்டும் என காத்து கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக அதை நிறைவேற்றுவோம். பிரதமரின் கொள்கைகளை ஒவ்வொரு வீடாக கொண்டு செல்வோம். மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள். ஊர் கூடி தேர் இழுப்போம். இது ஆரம்பம் மட்டும்தான் என்றார். ஆண்டவனே நம்ம பக்கம் - அண்ணாமலை பஞ்ச்! தண்டு மாரியம்மன் கோவிலில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், வருகின்ற 16ஆம் தேதி சென்னை கமலாலயத்தில் பொறுப்பேற்க உள்ளோம். இதனால் நமது வசிப்பிடமான கோவையிலிருந்து சாலை மார்க்கமாக செல்ல இருக்கிறோம். வழிநெடுகிலும் கட்சியினுடைய முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை சந்தித்துக் கொண்டு செல்கிறோம். கரோனா காலம் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு சென்னையில் பொறுப்பேற்க இருக்கின்றோம். தமிழ்நாடு பாஜகவிற்காக சிறப்பாக செயல்படுவேன். பாஜக கட்சியை பொறுத்தவரை இது தனிமனித கட்சி அல்ல. பாஜக கட்சியில் ஒரு பக்கம் அனுபவம் உள்ளது; மற்றொரு பக்கம் இளமை உள்ளது. இரண்டும் சேர்த்து கூட்டாக செயல்படுவோம் என்று தெரிவித்தார். அண்ணாமலையை வழியனுப்பி வைக்க சுமார் 300-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூடியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நோய்த் தொற்று பரவும் சூழலும் காணப்பட்டது.இதையும் படிங்க: மடாதிபதியான 5 வயது சிறுவன்!