ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் காலநிலை மாற்ற அவசரநிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கும் பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பசுமை தாயகம் சார்பில் காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் இந்தியாவில் காலநிலை அவசர பிரகடனம் செய்வது தொடர்பாக பிரதமரையும் தமிழ்நாடு முதலமைச்சரையும் சந்தித்து முறையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தமிழ்நாட்டிற்கான பிரச்னை அல்ல. அது இந்தியாவிற்கான பிரச்னை. இந்த ஆண்டு மட்டுமல்லாது கடந்த ஆண்டு நடந்த மாணவர் சேர்க்கையிலும் இது குறித்த விசாரணையை சிபிஐ மேற்கொள்ள வேண்டும். பேனர்கள் வைப்பது தேவையற்றது, மேலை நாடுகளில் இது போன்ற கலாசாரம் கிடையாது’ என்று கூறினார்.
இதையும் படியுங்க:
'நீட் தேர்வில் தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை!' - ஓபிஎஸ்