இதுகுறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். குறிப்பாக சுற்றுலாப்பயணிகள் வனவிலங்குகளுக்கு உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும். மீறி உணவு வழங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல வனவிலங்குகள் அருகில் சென்று புகைப்படம், செல்பி எடுக்கக்கூடாது. காப்பகத்திற்குள் செல்லும் பொழுது பிளாஸ்டிக், கண்ணாடி பொருள்களை வனப்பகுதியில் தூக்கி எறிவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மதுபானம், தீப்பெட்டி, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி எடுத்துச் செல்பவர்கள் மீதும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பேருந்து, கார், இருசக்கர வாகனத்தில் காப்பகத்திற்கு வரும் பயணிகள், பிளாஸ்டிக் பொருள்களாக பாலித்தீன் கவர்கள், குவளைகளை சாலைகளில் வீசக்கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: காலில் காயமடைந்த காட்டுயானைக்கு கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை!