கோவை: ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று, உடுமலைப்பேட்டையில் இருந்து பிறந்த குழந்தையுடன், கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. கோவை மலுமிச்சம்பட்டி அருகே சென்றபோது, ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பச்சிளம் குழந்தையும், ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆம்புலன்ஸில் இருந்த மேலும் சிலர் காயமடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு, வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மதுக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவைக்கு உத்தரவு!