கோவையில் பிஎஸ்ஜி விளையாட்டு சங்கம் சார்பில் 55ஆவது தேசிய கூடைப்பந்துப் போட்டிகள் கடந்த 9ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்களாக நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட இந்திய ராணுவ அணியை எதிர்த்து விளையாடிய இந்தியன் வங்கி அணி 79 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய ராணுவ அணி 61 புள்ளிகள் மட்டுமே எடுத்திருந்தது.
வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயுடன், பிஎஸ்ஜி சுழல் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாமிடம் வந்த இந்திய ராணுவ அணிக்கு 50,000 ரூபாயுடன் கோப்பையும் பெற்றுக்கொண்டது, மூன்றாம் இடமான கேரள மாநில மின்சார வாரிய அணிக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசாக இந்தியன் வங்கி அணி வீரர் ஹரி ராமுக்கு பத்தாயிரம் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். பிஎஸ்ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், கூடைப்பந்து கழக தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.