கோயம்புத்தூர்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெறும் திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொள்கின்றனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பேரூர் செட்டிப்பாளையம் பகுதியில் 73 ஏழை பெண்களுக்கு திருமணம் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான கால்கோல் நடும் விழா இன்று (ஜன.25) நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்துகொண்டு கால்கோள் நாட்டினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பிப்ரவரி 15ஆம் தேதி 73 ஏழை பெண்களுக்கு சீர்வரிசையுடன் திருமணம் நடத்திவைக்கப்பட உள்ளது.
கோவை மாவட்டம் அதிமுக சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடையும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம், முதலமைச்சர் வேட்பாளராக கழகத்தின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை அறிவித்த போதே முதலமைச்சரின் வெற்றி உறுதியாகிவிட்டது. இதற்கு மக்களே சாட்சி” என்றார்.
இதையும் படிங்க: 'கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்ணை எட்டி உதைத்த திமுகவினர்'- அமைச்சர் வேதனை