ETV Bharat / city

பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர் ஜெயராமனின் தேர்தல் பரப்புரை ஆலோசனைக் கூட்டம்! - Pollachi ADMK

கோவை: பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமாருடன் நேற்று (மார்ச் 12) தேர்தல் பற்றிய ஆலோசனையை நடத்தினார்.

அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்
அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்
author img

By

Published : Mar 13, 2021, 8:29 AM IST

சட்டப்பேரவைத் தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பொள்ளாச்சி நகர கழகம் சார்பில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டு, சட்டப்பேரவைத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது, மக்கள் மத்தியில் எவ்வாறு தேர்தல் பரப்புரை செய்வது போன்ற ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார் இல்லத்தில் நேற்று (மார்ச் 12) காலை நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பரப்புரை பற்றிய திட்டம் வரையறுக்கப்பட்டது. மேலும், கடந்த முறை பொள்ளாச்சி சட்டப்பேரவைகள் இருந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கு இந்த முறையும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு மிகக்குறுகிய காலம் உள்ளதால், அனைவரும் மிகவும் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டுமென பொள்ளாச்சி வேட்பாளர், பொள்ளாச்சி ஜெயராமன் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.