ETV Bharat / city

கோவை, தேனியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அதிமுகவினர் போராட்டம்! - O Panneerselvam

அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, கோவை மற்றும் தேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை, தேனியில் ஓ பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அதிமுக வினர் போராட்டம்

author img

By

Published : Jun 23, 2022, 6:06 PM IST

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு எழுந்த நிலையில் பல்வேறு கட்ட சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று(ஜூன் 23) நடைபெற்றது.

ஒற்றைத் தலைமைக்கான போட்டியில் பெரும்பான்மை தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாக கூறப்படும் நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றார். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், கூட்டத்திலிருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினர்.

அப்போது அங்கிருந்தவர்கள் பேப்பர் மற்றும் தண்ணீர் பாட்டில்களை பன்னீர்செல்வத்தை நோக்கி தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுகவில் இரட்டைத் தலைமை தான் இருக்கவேண்டும் என்றும்; கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.

இதேபோல் தேனி மாவட்ட அதிமுகவினர் பெரியகுளத்தில் உள்ள நாடளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு ஒன்று கூடி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினார்கள். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கங்களையும் அவர்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறுகையில், 'பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பேப்பர் வீசப்பட்டது கண்டிக்கத்தக்கது. அதிமுகவில் பன்னீர்செல்வம் புறக்கணிக்கப் படக்கூடாது. இரட்டைத் தலைமை தான் வேண்டும்' எனத் தெரிவித்தனர்.

முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு.. அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன ??

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.