ETV Bharat / city

கோவையில் நடிகை கவுதமி தேர்தல் பரப்புரை

கோவை: சிறுவாணி சாலையிலுள்ள காளம்பாளையத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் தனலட்சுமிக்கு ஆதரவாக நடிகை கவுதமி வாக்குகள் சேகரித்தார்.

Actress Gauthami election campaign in Coimbatore

author img

By

Published : Dec 28, 2019, 11:33 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் முடிந்த நிலையில், அடுத்தகட்ட தேர்தல் 30ஆம் தேதி நடக்கிறது.

இந்த நிலையில் கோவை சிறுவாணி சாலையில் உள்ள காளம்பாளையத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தனலட்சுமிக்கு ஆதரவாக நடிகை கவுதமி இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தனலட்சுமியை பெருவாரியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என வாக்காளர்களிடத்தில் கேட்டுக்கொண்ட நடிகை கவுதமி, தேர்தல் முடிந்த பின்னரும் மக்களை காண வருவேன் என்றும் உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கவுதமி, “உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள். வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படும்.” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர் அவரிடம் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கவுதமி, “இந்த தேர்தலுக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இந்த சட்டத்தால் எந்த இந்தியரும் பாதிக்கப்படமாட்டார்கள். ஆனால் வேண்டுமென்றே சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்” என்றார்.

போராட்டக்காரர்கள் குறித்த கேள்விக்கு, “சிலர் புரிந்துக் கொள்ளாமல் பேசினார்கள். தற்போது மக்கள் புரிந்துக் கொண்டுள்ளனர். சிலர் வேண்டுமென்றே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்” என்றார்.

கோவையில் நடிகை கவுதமி தேர்தல் பரப்புரை
“தமிழ்நாட்டிற்கு நிர்வாக திறன் மிக்க பட்டியலில் முதலிடம் கிடைத்தது அங்கீகாரம்” என அதுதொடர்பான கேள்வியொன்றிற்கு பதிலளித்தார். நடிகை கவுதமி செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உடனிருந்தார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வானவர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து

Intro:பாஜக வேட்பாளரை ஆதரித்து நடிகை கௌதமி பிரச்சாரம்.Body:கோவை சிறுவாணி சாலையில் உள்ள காளம் பாளையத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தனலட்சுமிக்கு வாக்கு சேகரிக்க நடிகை கௌதமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசிய அவர் வேட்பாளர் தனலட்சுமியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுமென்றும் தற்போது மட்டுமல்ல தேர்தல் முடிந்த பின்பும் மக்களை காண நான் வருவேன் என்றும் தெரிவித்தார்.

அதனை பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கவுதமி உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அதன்மூலம் நல்ல வளர்ச்சித் திட்டம் கொண்டுவரப்படும் என்றும் கூறினார். மேலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களால் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தார் குடியுரிமை திருத்த மசோதா சட்டத்தால் இந்தியர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று கூறினார். இதை புரிந்து கொள்ளாமலேயே மக்கள் பலரும் பிரச்சனை செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.