நடிகர் விஜய்யின் 46ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையம் விஜய் ரசிகர் மன்றத் தொண்டர் அணி சார்பில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்களும் தலா 10 கிலோ அரிசி பைகளும் நிவாரணமாக வழங்கப்பட்டது.
அதேபோல் பொள்ளாச்சியில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றிவரும் காவல்துறையினருக்கு முகக் கவசம், கை உறை, கிருமிநாசினி உள்ளிட்ட நோய்த் தடுப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டது.
இதில், பொள்ளாச்சி நகரத் தலைவர் குட்டப்பன், பாலாஜி, போடிபாளையம் தலைவர் குமார் உள்ளிட்டோர் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள்
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அன்னதானம், ரத்த தானம் செய்தனர். இந்நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட அவரது ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் குடமுருட்டி கரிகாலன், செந்தில், மூர்த்தி, யூகோ கார்த்திக், சீனி ஐயப்பன், சதீஷ் ஹைதர் அலி, அப்பாதுரை கலை, ஸ்ரீரங்கம் நகரத் தலைவர் பால்பாண்டி, சமயபுரம் நகரத் தலைவர் சசிகுமார், லோகேஸ்வரி, முத்து, விஜய் உள்பட ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
ஆதரவற்றோர் இல்ல அன்னதானம்:
திருச்சி இபி ரோடு முருகன் தியேட்டர் அருகில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நேற்று மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் ஆர்.கே. ராஜா, சுரேஷ், சிவா, ஞானவேல், சரண்ராஜ், அருள், மதியரசன், மகளிர் அணி சார்பில் சசிரேகா, தீபா என பலர் கலந்து கொண்டனர்.
அன்னதானம்:
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள கங்காரு ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள 60க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் ஒன்ஸ்மோர் குரூப் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கண்ணன், பாஷா உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க... ஏழை மக்களுக்கு உதவி செய்த விஜய் ரசிகர்கள்!