கோயம்புத்தூர்: பொள்ளாச்சி ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இங்குச் செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாள்களில் அதிகப்படியான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று ஆடி வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நாள் என்பதால் காலை முதலே பக்தர்கள் கோயிலில் குவியத் தொடங்கினர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் பக்தர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்படுகிறது. முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: ஆடி வெள்ளி: பண்ணாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்