வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட வால்பாறை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டுமாடு, அபூர்வ பறவை இனங்கள் என்று பலவகை உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன.
வால்பாறை பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் வனத்தை விட்டு வெளியேறும் புலி, சிறுத்தைகள் குடியிருப்புப் பகுதியில் புகுந்து வளர்ப்புப் பிராணிகளை வேட்டையாடிவருகின்றன.
வனத் துறையினர் வால்பாறை பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைத்து வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து பொதுமக்கள், இரவில் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்திவருகின்றனர்.
நேற்றிரவு காரில் வால்பாறை சென்ற சுற்றுலாப் பயணிகள் கவர்க்கல் பகுதியில் சாலையில் சிறுத்தை இருப்பதைக் கண்டு வாகனத்தை நிறுத்தி சிறுத்தையைத் தங்களது மொபைலில் காணொலி எடுத்தனர். அப்போது சாலையில் இருந்த சிறுத்தை திடீரென எதிரே இருந்த புதருக்குள் பாய்ந்து, உள்ளே இருந்தக் கேழை ஆட்டைப் பிடித்து வேட்டையாடியது.
இதைக் காரில் வால்பாறை சென்றவர்கள் காணொலியாகப் படம் பிடித்துள்ளனர். தற்பொழுது இந்தக் காணொலி வாட்ஸ்அப்பில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆளுநர் ரவி தரிசனம்