கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் செய்தி நாளிதழில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் ஒருவர், நேற்று உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில் தனது குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் மற்றும் சிற்றுண்டி ஆர்டர் செய்துள்ளார். ஆனால், இவருக்கு வந்த பார்சலில் ஐஸ்கிரீம் மற்றும் சிற்றுண்டிக்கு பதிலாக ஆணுறை இருந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதனை புகைப்படம் எடுத்து அவரது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு ஸ்விக்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அந்நிறுவனம் மன்னிப்புக்கோரி பணத்தை திருப்பி அளிப்பதாக கூறியுள்ளது. ஆனால், பணம் வேண்டாம் எனவும்; சரியாக பொருட்களை டெலிவரி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் இதுபோன்று பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வலைதளவாசிகள் பலரும் இதனை அதிகமாகப்பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் தகர்க்கப்படும் மிகப்பெரிய கட்டடங்கள்... 5,000 குடியிருப்புவாசிகள் வெளியேற்றம்...