கோவை, சரவணம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஆறு இளைஞர்கள் பயணம் செய்தனர். அதை அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் கைப்பேசியில் பதிவுசெய்து பகிர்ந்துள்ளார்.
அந்தக் காட்சிகள் வேகமாகப் பரவிவரும் நிலையில் வாகனத்தின் எண்ணை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
விசாரணையில் வாகனத்தின் உரிமையாளர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாகனத்தை வேறு நபருக்கு விற்றுவிட்டதும், அவர் பெயர் மாற்றம் செய்யாமல் அந்த இருசக்கர வாகனத்தை இயக்கிவந்ததும் தெரியவந்தது.
தொடர் விசாரணை மேற்கொண்ட கோவை மாநகரப் போக்குவரத்து காவல் துறையினர் சாகசப் பயணத்தில் ஈடுபட்ட ஆறு நபர்களை இன்று (மார்ச் 5) கைதுசெய்தனர்.
அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல்செய்தனர். இது குறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.