கோயும்புத்தூர்: கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (28), ஹைதராபாத்தில் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த ஏழு மாதங்களாக சொந்த ஊரிலிருந்து பணியாற்றி வரும் நிலையில், ஹைதராபாத்தில் பணியாற்றி வந்தபோது, அங்கு தங்கியிருந்த திருவாரூரைச் சேர்ந்த சஹானா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இருவரும் கடந்த செப்டம்பர் மாதம், அருண் வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு கோவையில் வசித்து வருகின்றனர். இவர்களின் திருமணத்திற்குப்பின் இஸ்லாமியரான சஹானா இந்து மதப்படி மாறிவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சஹானாவின் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள், அருணை இஸ்லாமிய மதத்திற்கு மாறும்படி வலியுறுத்தி வந்துள்ளனர். இதற்கு அருணின் தந்தை குமரேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
4 இஸ்லாமியர்களும், ஒரு உ.பி.,வாசியும்
இதனால், சஹானாவின் உறவினர்கள் அவர்களது வாட்ஸ்-அப் குழுவில் இதுதொடர்பாக விவாதித்து வந்துள்ளனர். அப்போது அவரது உறவினர்கள், அருணை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யத் திட்டம் தீட்டியதோடு, இதுதொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு நபரிடம் துப்பாக்கி வாங்க தொலைபேசியிலும் பேசியுள்ளனர்.
இந்த தகவல் அறிந்த தேசிய புலனாய்வு முகமை (NIA), இதுதொடர்பாக கோயம்புத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர், ஈரோட்டைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, திருச்சியைச் சேர்ந்த இம்ரான்கான், சதாம் உசேன், சென்னையைச் சேர்ந்த பக்ருதீன், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்வீர் அஜய் ஆகிய ஐந்து பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவினாசி கிளைச்சிறையில் அடைத்தனர்.
மேலும், துப்பாக்கி விற்பனையாளர்களுடன் இவர்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: யுவராஜூக்கு ஆயுள் தண்டனை: 'தூக்கை விட சரியானது இது' - கோகுல்ராஜின் தாயார்