கோவையில் நேற்று தெலுங்கு வீதி பகுதியில் வெரைட்டி ஹால் காவல்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது 200 கிராம் ஐம்பொன் சிலையின் உடைந்த பாகத்தை விற்க முயன்ற சலீவன் வீதியை சேர்ந்த ஹரி மற்றும் செல்வபுரம் பகுதியை பால வெங்கடேஷ் ஆகிய இருவரை கைது சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் இந்த பாகத்தை விற்று தர கூறியதாக வாக்கு மூலம் அளித்தனர்.
அவர்கள் அளித்த வாக்கு மூலத்தை தொடர்ந்து இன்று ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இந்த சம்பவத்தில் பன்ணைப்பட்டி பகுதியை சேர்ந்த தீனதயாளன் மற்றும் கன்னிவாடி பகுதியை சேர்ந்த அருண் ஆகிய இருவரும் ஈடுப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் அவர்களிடமிருந்து 33 கிலோ எடையுள்ள ஒரு ஆண் கடவுளின் சிலை மற்றும் 20 கிலோ எடையுள்ள பெண் கடவுள் சிலை என மொத்தம் 53 கிலோ எடையுள்ள 2 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து திருநாவுக்கரசு, தீனதயாளன், அருண் மூவரையும் கைது வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு சிலைகளிலும் கை பகுதி உடைந்து காணப்பட்டது.
அதில் ஒரு சிலையின் பாகம் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீதம் ஒரு சிலையில் ஒரு பாகம் எங்கே விற்கப்பட்டது, இந்த சிலை எங்கிருந்து எடுக்கப்பட்டது? இது போன்று வேறு எங்கேனும் சிலை கடத்தி இருக்கிறார்களா? இதில் மேலும் யாரேனும் தொடர்புபட்டுள்ளனரா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சிலை கடத்தல் வழக்கு: சுபாஷ் சந்திர கபூரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!