பொள்ளாச்சி கோட்டூர் சாலை பகுதியில் மதுவிலக்கு ஆய்வாளர் பாலமுருகன் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் சின்னகாமனன் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கேரள மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்று அவ்வழியே வந்தது. அதை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 220 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தன.
இதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்த பாலாஜி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, கேரளா மாநிலம் இரட்டை குளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறந்ததால் அங்கே மதுபாட்டில்களை வாங்கி கேரளாவில் அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு செல்வதாக கூறினார்.
இதனையடுத்து அவரை கைதுசெய்த மதுவிலக்கு காவலர்கள் 220 மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.