கோயம்புத்தூர் மாவட்டம் வேலாண்டிபாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன், முதலீட்டு கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த சங்கத்தில் நகைக்கடன் வழங்குவதிலும், பத்திரத் தொகை கொடுப்பதிலும் மோசடி நடப்பதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். அதில், 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை ரூ.13 கோடியே 29 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. அதனால் அவர்கள், மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் சரவணக்குமார், முன்னாள் தலைவர் வரதராஜன், எழுத்தர் அனுசுயா, உதவி செயலாளர் விஷ்ணு சங்கர், நகை மதிப்பீட்டாளர் ராதாமணி, தேவராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி - மூவர் மீது வழக்குப் பதிவு