ETV Bharat / city

தமிழ்நாடே எங்களை நிராகரித்துவிடாதே - தமிழில் வருத்தம் தெரிவித்த சொமெட்டோ!

வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாசாரத்தின் மீதான எதிர்க்கருத்தை வெளிப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், இதனால் தமிழ்நாடு எங்களை நிராகரித்துவிட வேண்டாம் எனவும் சொமெட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

zomato, zomato hindi issue , zomato care, சொமெட்டோ
தமிழில் வருத்தம் தெரிவித்த சொமெட்டோ
author img

By

Published : Oct 19, 2021, 12:46 PM IST

Updated : Oct 19, 2021, 1:29 PM IST

சென்னை: ஆன்லைன் உணவு டெலிவரி சேவையில் ஈடுபட்டுவரும் நிறுவனம் சொமெட்டோ. இந்நிலையில், உணவு டெலிவரியில் ஏற்பட்ட தவறுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கக் கோரிய வாடிக்கையாளரிடம், மொழி தெரியாததால் பணத்தைத் திருப்பி அளிக்க இயலாது என்றும், இந்தியர் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்றும் பதிலளித்தார்.

இதன் உரையாடல் புகைப்படத்தை வாடிக்கையாளர் விகாஷ் ட்விட்டரில் பதிவிட்டார். அவரின் ட்விட்டர் பதிவை அடிப்படையாகக் கொண்டு ட்விட்டரில் #Reject_Zomato என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி, சொமெட்டோ நிறுவனத்திற்குக் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

சேவை முகவர் பணிநீக்கம்

இந்நிலையில், சொமெட்டோ நிறுவனம் இன்று (அக்டோபர் 19) ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர் விகாஷிடம் தங்களின் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறி தமிழிலும், ஆங்கிலத்திலும் இரண்டு அறிக்கை இணைத்துள்ளது.

'வணக்கம் தமிழ்நாடு' எனத் தொடங்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில், "எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் நாட்டின் மாறுபட்ட கலாசாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய பணியாளரைப் பணிநீக்கம் செய்துள்ளோம்.

எங்களுக்கு அனிருத்-தான் அம்பாஸிடர்

பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகக் கருத்தைப் பகிரக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.

zomato, zomato hindi issue , zomato care, சொமெட்டோ
சொமெட்டோ ட்வீட்

இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள் முழுப் பயன்பாட்டிற்காகத் தமிழ்ச் செயலியை உருவாக்குகிறோம்.

நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளூர்மயமாக்கியுள்ளோம் (எ.கா. நாங்கள் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக இசையமைப்பாளர் அனிருத்தை தேர்வுசெய்துள்ளோம்). மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழர் அழைப்புதவி மையம் / சேவை மையத்தை உருவாக்கும் பணியில் உள்ளோம்.

உணவு, மொழி ஆகியவை ஒவ்வொரு மாநிலத்தின், கலாசாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துவைத்துள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தப் பிரச்சினையால் எங்களை நிராகரித்துவிடாதீர்கள் (pls don't #Reject_Zomato) எனவும் ட்வீட்டில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Last Updated : Oct 19, 2021, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.