ETV Bharat / city

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகி கார் மீது ஆசிட் வீச்சு!

author img

By

Published : Dec 21, 2020, 7:49 PM IST

சென்னை: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளர் கார் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.

attacked
attacked

கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கார்த்திக் (36). இவர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளராக உள்ளார். ஆந்திர முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாள், அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில், பங்கேற்பதற்காக மாநிலச்செயலாளர் கார்த்திக், மண்டபத்தின் பின்புறம் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார்.

பின்னர், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து பார்த்த போது, கார்த்திக்கின் கார் மீது ஆசிட் வீசப்பட்டிருந்தது. இதனால் காரின் பல இடங்களில் சேதம் ஏற்பட்டிருந்தது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையிலான காவலர்கள், காரை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, ஆசிட் வீசப்பட்ட பல இடங்களில் நுரை பொங்கி காரின் மேல் பகுதி முழுவதும் சேதமடைந்திருந்தது.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கார் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கடன் தொல்லை: குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.