சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ்வரன் (26). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு அவரது நண்பர் தினேஷ் என்பவருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு, பாரிமுனையில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட வந்துள்ளார்.
உயர்நீதிமன்றம் அருகே வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த போது, எதிர்பாராதவிதமாக சாலைத் தடுப்பின் மீது மோதியுள்ளார். இதில் படுகாயமடைந்த புவனேஷ்வரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் தினேஷ் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த யானை கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள், புவனேஷ்வரன் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்விக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஊரடங்கு உத்தரவு அமல் காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில், இவர்ககளுக்கு மது எப்படி கிடைத்தது எங்கிருந்து வாங்கினார்கள் என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்பிரே பாட்டில் வெடித்து தீ விபத்து: 5 குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயம்!