ETV Bharat / city

மாணவி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரிய வாலிபர்; தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் - Madras High Court

ப்ளஸ் 2 மாணவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

மாணவி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரிய வாலிபர்; தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்

author img

By

Published : Oct 5, 2022, 9:21 PM IST

திருவள்ளூர்: மணலி புது நகரை சேர்ந்த ஜெயராமன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். மாணவியின் பெற்றோர் தெரிந்தவர்கள் என்பதால் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி, மாணவியின் வீட்டுக்குச் சென்ற ஜெயராமன், மாணவியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

ஆனால், படிப்பு முடிந்த பின்னர் அது குறித்து பேசிக்கொள்ளலாம் என மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயராமன், மாணவியை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றம், ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது. ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, உடனடியாக திருமணம் செய்து வைக்காததால் இருவரும் தற்கொலைக்கு முயற்சித்ததாக ஜெயராமன் தரப்பில் வாதிடப்பட்டது.

மாணவியின் உடலில் இருந்த 32 காயங்களை சுட்டிக்காட்டி, இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆயுள் தண்டனையை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி, ஜெயராமனின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

இதையும் படிங்க: கர்ப்பமான 14 வயது சிறுமி உட்பட கடத்தப்பட்ட 13 சிறுமிகள் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.