சென்னை திரு.வி.க நகர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொன்னுசாமி நகர் 3ஆவது தெருவில் இன்று (ஜூன் 15) அடையாளம் தெரியாத நபர் நீண்ட அரிவாளுடன் சுற்றித் திரிந்ததோடு, அங்கிருந்த சிறுவர்கள், பெண்கள் என அனைவரையும் அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார்.
மேலும், அங்கிருந்த வாகனங்களையும் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தியுள்ளான். இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் சிதறி ஓடினர். பின் அங்கு வந்த அந்த நபரின் கூட்டாளி ஒருவன் அரிவாளுடன் திரிந்த நபரை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
இச்சம்பவம் அங்கிருந்த வீட்டின் சி.சி.டி.வி கேமராவில் பதிவான நிலையில் சி.சி.டி.வி காட்சிகளை ஆதாரமாக வைத்து அப்பகுதி மக்கள் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் அரிவாளைக் காட்டி சிறுவர்கள் உள்பட அனைவரையும் மிரட்டிய நபர் மீது புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் சி.சி.டி.வி காட்சிகள் உதவியுடன் அடையாளம் தெரியாத நபர் மற்றும் அவனது கூட்டாளி யாரென்பதை அறிய விசாரணை மேற்கோண்டு அவர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர் நீண்ட அரிவாளுடன் சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:விராலிமலை தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றி: திமுக வேட்பாளர் வழக்கு