ETV Bharat / city

’மெட்ரோ’ படம் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது!

author img

By

Published : Aug 23, 2021, 7:01 AM IST

’மெட்ரோ’ படம் பார்த்து சாலையில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

சென்னை: வில்லிவாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அனுஷ்யா (30). பெருங்களத்தூரிலுள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர், கடந்த 18ஆம் தேதி மாலை தோழியுடன் வில்லிவாக்கம் எஸ்பிஐ வங்கி அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க நகையை அறுத்துக் கொண்டு தப்பியோடினார்.

செயின் பறிப்பு

அதேபோல் கொளத்தூரில் நடந்து சென்றுகொண்டிருந்த 15 வயது சிறுமியின் கழுத்திலிருந்த ஒரு சவரன் தங்க நகையையும் பறித்துச் சென்றார்.

ஒரே நாளில் அடுத்தடுத்து நடைப்பெற்ற இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், முதற்கட்டமாக அப்பகுதிகளிலுள்ள 50க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது, திருவிக நகர் ஒத்தவடை பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (24) என்பது தெரியவந்தது.

மேலும், அவர் தன் முகத்தை மறைக்காமல் சொந்த வாகனத்தில் சென்றது உள்ளிட்டவற்றை வைத்து அந்நபர் திருட்டு வேலைக்கு புதிது என்பதையும் காவல் துறையினர் கண்டறிந்தனர்.

படம் பார்த்து கொள்ளை!

இதையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். இவ்விசாரணையில், அந்நபர் திருவிக நகர் பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

செயின் திருடப்பட்ட சிசிடிவி காட்சி

மேலும், போதிய வருமானம் இல்லாததால் 2016ஆம் ஆண்டு தமிழில் வெளியான ’மெட்ரோ’ உள்ளிட்ட திரைப்படங்கள், யூடியூப் உள்ளிட்ட தளங்களைப் பார்த்து கொள்ளையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

பின்னர், அவரிடமிருந்து மூன்று சவரன் செயின், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

இதையும் படிங்க: சைக்கிள் திருட்டு - சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.