ETV Bharat / city

தேசிய விருதுவென்ற நடிகை லட்சுமி பிரியாவுக்கு 'யாமா' படக்குழுவினர் வாழ்த்து!

author img

By

Published : Jul 27, 2022, 7:07 PM IST

சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வென்ற நடிகை லட்சுமி பிரியாவுக்கு ‘யாமா’ படக்குழுவினர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தேசிய விருது வென்ற நடிகை லட்சுமி பிரியா
தேசிய விருது வென்ற நடிகை லட்சுமி பிரியா

நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்குப் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், லட்சுமி பிரியா சந்திரமெளலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ‘யாமா’ திரைப்படத்தின் குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ‘யாமா’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ”தனது மாறுபட்ட நடிப்பாலும், அழுத்தமான கதாப்பாத்திரங்கள் மூலமாகவும் ரசிகர்களைக் கவர்ந்து வரும் லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதை ‘யாமா’ படக்குழு கொண்டாடி மகிழ்கிறது.

இந்த அங்கீகாரத்திற்கு மிகப் பொருத்தமானவரான லட்சுமி பிரியா சந்திரமெளலி, இதுபோன்ற பல உயரிய விருதுகளை வென்று சிறந்த நடிகைக்கான பல உச்சங்களைத் தொடுவார் என்று வாழ்த்துகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'தி லெஜண்ட்' திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடத் தடை... உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.