சென்னை: சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் (ICID), ஒவ்வொரு ஆண்டும் உலக பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் நீர் சேமிப்பு விருதுகளை வழங்கி வருகிறது. போன்ற விருதுகளை அறிவிக்கிறது.
இந்திய தேசிய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் குழுமம் (INCID) நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இதற்கான பரிந்துரையை அனுப்புகிறது. அதன்படி 2021ஆம் ஆண்டு ஜுலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீர்த்தேக்கம், பேச்சிப்பாறை அணை, மதுராந்தகம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய 6 நீர்த்தேக்கக் கட்டமைப்புகளை பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சர்வதேச நீர்ப்பாசன மற்றும் வடிகால் ஆணைய ஆய்வுக்குழு பரிந்துரைக்கப்பட்ட கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்தது. இதன் தொடர்ச்சியாக, உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கான விருதுகளுக்கு கல்லணை, வீராணம் ஏரி மற்றும் காளிங்கராயன் அணைக்கட்டு ஆகிய மூன்று கட்டமைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.
ஒரு நாட்டிற்கும் 4 விருதுகள் வழங்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டிற்கு இந்தியாவிற்கு 4 விருதுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு 3 விருதுகள் பெறுகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய மிகப்பெரிய சாதனை.
தேர்வு செய்யப்பட்ட பாசன கட்டமைப்புகள் பற்றிய விவரம்
1. கல்லணை (Kallanai Dam): வரலாற்று சிறப்பு மிக்க கல்லணை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழ மன்னன் கரிகாலனால் (Karikala Cholan) காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு பழமையான அணையாகும். இது உலகின் நான்காவது பழமையான நீர்மாற்று அமைப்பு அல்லது நீர் ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பாகும். நாட்டில் இன்னும் பயன்பாட்டில் உள்ள மிகப் பழமையான கட்டமைப்பாகும். அதன் அற்புதமான கட்டடக்கலை காரணமாக இது தமிழ்நாட்டின் முதன்மையான சுற்றுலாத்தலமாகத் திகழ்கிறது.
2. வீராணம் ஏரி (Veeranam Lake): கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் நீர்த்தேக்கம் 9ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழன் (Parantaka I) காலத்தில் உருவாக்கப்பட்டது. வீரநாராயண பெருமாள் கோயிலின் பெயரால் "வீரநாராயணன் ஏரி" எனப் பெயரிடப்பட்டு, தற்போது "வீராணம் ஏரி" என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தின் காட்டு மன்னார் கோயில் வட்டம் முழுவதும், சிதம்பரம் வட்டத்தில் 102 கிராமங்களில் உள்ள 44,856 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுவதோடு சென்னை மாநகருக்கு குடிநீர்வழங்கும் முக்கிய நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
இதையும் படிங்க: Legacy Construction: ரூ.7 லட்சத்தில் மாடி வீடு: பாரம்பரியமுறையில் கட்டி அசத்திய விவசாயி