ETV Bharat / city

உறவினர் ரூ. 51 லட்சத்தைத் திருடியதாக நாடகமாடிய பெண்: பேஸ்புக் பழக்கத்தால் நேர்ந்த விபரீதம் - Money Laundering

சென்னை: உறவினர் 51 லட்சம் ரூபாயை திருடியதாக நாடகமாடிய பெண், அப்பணத்துடன் பேஸ்புக் ஆண் நண்பருடன் வெளியூருக்கு தப்பிச்செல்ல திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

arrested
arrested
author img

By

Published : Dec 2, 2020, 2:44 PM IST

Updated : Dec 2, 2020, 8:45 PM IST

சென்னை மந்தைவெளி பெரிய பள்ளி தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் தமீம் அன்சாரி (40). இவர் கடந்த மாதம் 20ஆம் தேதி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது வீட்டில் வைத்திருந்த 51 லட்சம் ரூபாய் காணாமல் போனதாகவும், அதனைக் கண்டுபிடித்துத் தருமாறும் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக பணம் திருடுபோகும் நாளில், தமீம் அன்சாரியின் உறவினர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அந்த நேரத்தில் காணாமல்போனதால் உறவினர்கள் யாராவது திருடியிருக்கலாம் எனத் தமீம் அன்சாரி சந்தேகமடைந்தார்.

அதன்பின் தமீம் அன்சாரி மனைவி கன்ஸீம், பணத்தைத் திருடியது அன்சாரியின் தங்கை கணவர் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். அதை தனது மகன் பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கறுப்புப் பையில் எடுத்துச் சென்றதாகவும் கன்ஸீம் மகன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அன்சாரியின் தங்கை கணவரை காவல் துறையினர் விசாரித்தபோது, தான் திருடவில்லை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து கன்ஸீம் மகனை விசாரித்தபோது, தனது தாய் அவ்வாறு கூறச் சொன்னதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பின் அன்சாரியின் மனைவி கன்ஸீமை விசாரணை செய்துள்ளனர். இந்நிலையில் காவல் துறையினர் தன்னை தொந்தரவு செய்வதாகவும், தனது செல்போனை தேவையில்லாமல் ஆய்வுசெய்வதாகவும் மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கன்ஸீம் மீது காவல் துறையினருக்குச் சந்தேகம் வலுத்துள்ளது.

தொடர்ந்து கன்ஸீம் செல்போன் அழைப்புகளை ஆய்வுசெய்ததில் ரியாஸ் என்ற நபருடன் அடிக்கடி தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

அதனையடுத்து கன்ஸீமை காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்ததில், 53 லட்ச ரூபாய் பணத்தை கறுப்புப் பையில் ரியாஸ் என்பவரிடம் ராயப்பேட்டை மருத்துவமனையில் ஒப்படைத்ததாகவும், கேட்கும்போது திருப்பித் தர வேண்டும் எனத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

ரியாஸ் குறித்து விசாரணை செய்ததில் கன்ஸீமுடன் 3 வருடமாக பேஸ்புக் மூலம் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. முன்னதாக ரியாஸின் செலவுக்காக நகைகளையும் கொடுத்ததாகவும் கன்ஸீம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சென்னை புரசைவாக்கத்தில் வசித்துவந்த ரியாஸை பட்டினப்பாக்கம் காவல் துறையினர் கைதுசெய்து 43 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல்செய்துள்ளனர். அவரிம் விசாரணை நடத்தியதில் கன்ஸீமும், ரியாஸும் கொல்கத்தாகவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அன்சாரி மனைவி கன்ஸீமயைும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் கைதான ரியாஸ் பேஸ்புக் மூலம் பெண்களிடம் காதல் நாடகமாடி பணம் வசூல் செய்துவருவதையும் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இவரிடம் வேறு ஏதேனும் பெண்கள் ஏமாந்துள்ளனரா எனவும் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Last Updated : Dec 2, 2020, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.