சென்னை: குரோம்பேட்டை சாஸ்திரி காலனி 2ஆவது தெருவில் வசிப்பவர், பெருமாள் (45). இவரது மனைவி பரமேஸ்வரி (38). இவர்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடச் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளனர்.
அப்போது வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 7 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. உடனே, இது குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல் துறை, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டுப் பூட்டை உடைக்காமல் திருடியது!.
குரோம்பேட்டை பகுதியில் காவல் துறை தரப்பில் சுமார் 40க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், காவல் துறை சிசிடிவி கேமராவை சரிவரப் பராமரிக்காததால் சிசிடிவி படக்கருவி வேலை செய்யவில்லை.
இதனால், அப்பகுதியில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளைப் பிடிப்பதில் காவல் துறைக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிசிடிவி கேமராக்களை சரிசெய்யக் கோரிக்கை
இதற்கிடையே, வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் நோட்டமிட்டு, 7 சவரன் நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனியாவது, குரோம்பேட்டை காவல் துறை உடனே சிசிடிவி கேமராக்களை சரி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வர்லாம் வா வர்லாம் வா! - ரெய்டுக்கு அழைப்புவிடுக்கும் ஜெயக்குமார்