ETV Bharat / city

மீண்டும் அதிகரிக்கும் கரோனா

author img

By

Published : Jul 29, 2021, 9:16 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

covid 19
covid 19

சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வந்த கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு இன்று(ஜூலை 29) அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து 1,859 ஆக பதிவாகியுள்ளது.

சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் கரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் 24 ஆயிரத்து 239 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்,164 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நோய் பரவல் விகிதம் 0.7 என உயர்ந்துள்ளது.

covid 19
கோவிட் 19 பாதிப்பு நிலவர வரைபடம்

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று(ஜூலை 29) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில்,' தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 359 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழகத்தில் இருந்த ஆயிரத்து 858 நபர்களுக்கும், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவர் என 1,859 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 62 லட்சத்து 56 ஆயிரத்து 593 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 25 லட்சத்து 55 ஆயிரத்து 664 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.

covid 19
மாவட்ட வாரியாக நிலவரம்

இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 27 ஆயிரத்து 207 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில், மேலும் குணமடைந்த 2,145 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை முடிந்து குணமடைந்து வெளியே சென்றவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 434 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 7 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 21 நோயாளிகள் என மேலும் 28 பேர் இறந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே தமிழ்நாட்டிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை- 537732

கோயம்புத்தூர்- 228874

செங்கல்பட்டு-161736

திருவள்ளூர் - 113268

சேலம்- 93236

திருப்பூர்- 87650

ஈரோடு- 93369

மதுரை - 73461

காஞ்சிபுரம்- 71619

திருச்சிராப்பள்ளி - 72262

தஞ்சாவூர்-67639

கன்னியாகுமரி - 60032

கடலூர் - 60309

தூத்துக்குடி - 55046

திருநெல்வேலி - 47853

திருவண்ணாமலை - 51974

வேலூர் - 48015

விருதுநகர் - 45466

தேனி - 42900

விழுப்புரம் - 43794

நாமக்கல் - 47065

ராணிப்பேட்டை - 41926

கிருஷ்ணகிரி- 41275

திருவாரூர்- 37742

திண்டுக்கல் - 32160

புதுக்கோட்டை - 28091

திருப்பத்தூர்- 28213

தென்காசி- 26828

நீலகிரி- 30438

கள்ளக்குறிச்சி- 28969

தருமபுரி- 26048

கரூர் - 22618

மயிலாடுதுறை- 20988

ராமநாதபுரம் - 20012

நாகப்பட்டினம்-18601

சிவகங்கை - 18747

அரியலூர்- 15729

பெரம்பலூர் - 11460

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1013

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1078

ரயில் மூலம் வந்தவர்கள் 428

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.