ETV Bharat / city

நடப்பு மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா? - கரோனா வைரஸ்

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், இந்தியாவில் சற்று தணிந்து இருந்தாலும், அதனைத் தொடர்ந்து கட்டுப்படுத்துவதற்கு அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு additional funding for the health sector Union budget 2021 Budget Will there be additional funding for the health sector in the current federal budget? Chennai health news சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா சுகாதாரத் துறை கரோனா வைரஸ் ரெக்ஸ் சற்குணம்

author img

By

Published : Jan 28, 2021, 10:51 PM IST

சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய கரோனா வைரஸ் தாக்கம் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் நோய் தொற்று பொது முடக்கத்தையும் ஏற்படுத்தியது.

இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சமூக பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் நோய்த் தொற்றினை கண்டறிவது உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு போதுமான மருத்துவ கட்டமைப்புகள் இந்தியாவில் அப்போது இல்லாமல் இருந்தன. மேலும் ஆராய்ச்சி நிலையங்களும் போதுமான அளவில் தற்போது வரை இந்தியாவில் இல்லாமல் இருக்கிறது.

மருத்துவ நிதி ஒதுக்கீடு

கடந்த ஆண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு பின்னர் பரவிய கரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வு துறை மேம்படுத்துவதற்கு நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முன்னாள் இயக்குனருமான டாக்டர் ரெக்ஸ் சற்குணம்

இந்திய நல்வாழ்வு சங்கத்தின் தலைவரும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முன்னாள் இயக்குனருமான டாக்டர் ரெக்ஸ் சற்குணம் கூறும்போது, மத்திய- மாநில அரசுகள் மக்கள் நல்வாழ்வு துறைக்கான ஒதுக்கீட்டினை அதிகரிக்கவேண்டும். இந்தியாவின் ஜிடிபியில் தற்பொழுது ஒரு சதவீதம் மட்டுமே மத்திய அரசு ஒதுக்குகிறது. அதனை 3 சதவீதம் அளவிற்கு உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல் மாநில அரசும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கரோனா நிவாரணம் வழங்க கோரிக்கை

தமிழ்நாட்டில் மக்களுக்கு தேவையான நல்வாழ்வை வழங்குவதற்கு உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் தேவையான அளவு ஊட்டச்சத்தினை வழங்க வேண்டும். கரோனா வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும். இந்தியாவில் கோவிஷூல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதை மட்டும் போதுமானதா எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் எச்பிஎல் இன்டர் கிரேடட் காம்ப்ளக்ஸ் திருமேனியில் உள்ளது. அதனை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் சமீபத்தில் பார்வையிட்டு சென்றுள்ளார். எனவே அந்த ஆராய்ச்சி நிறுவனத்திலும் தடுப்பூசி ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். வருமான வரி செலுத்தாத பொதுமக்களுக்கு மத்திய அரசு மாதம் தோறும் ஏழு ஆயிரம் ரூபாய் சில மாதங்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும்.

ஜிடிபி ஒதுக்கீடு

கரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறையில் ஏற்கனவே உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னால் வரக்கூடிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் போதுமான மருத்துவர்கள் பணியில் அமர்த்த வேண்டும். இந்தியாவில் ஆராய்ச்சியினை அதிகரிக்கவும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் ஜெயலால்

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் ஜெயலால் கூறும்போது, இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த முடிந்ததற்கு காரணம் இங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகள் தான். மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரத்துறைக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியானது ஜிடிபியில் ஒரு சதவீதத்தில் தான் இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் சுகாதாரத் துறைக்கு 7 சதவீதம் வரை நிதி ஒதுக்கீடு செய்கின்றனர். மத்திய அரசிடம் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைக்கும் ஒரு சதவீதத்திற்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

வடமாநிலங்களில் மருத்துவ வசதி குறைவு

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு வந்த பின்னர் உட்கட்டமைப்பு வசதிகளின் அவசியத்தை உணர்த்தி உள்ளது. எனவே 5 சதவீதம் வரை சுகாதாரத்துறைக்கு நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவ துறை சேவை என்பது மாநிலங்களை சேர்ந்தது. குறிப்பாக வடமாநிலங்களில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் உள்ளன.

கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் டெல்லியில் 4 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. எனவே அனைத்து பகுதிகளிலும் மருத்துவக் கல்லூரிகளில் தொடங்கும் வகையில் நிதியினை ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால் அதிக அளவில் மருத்துவர்கள் உருவாகுவார்கள்.

நடவடிக்கை

அதேபோல் ஆராய்ச்சிக்குரிய நிதியையும் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக தனி பிரிவையும் உருவாக்க வேண்டும். அதேபோல் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் சுகாதாரமாக இருப்பதற்காகவும் தொற்றா நோய்கள் பாதிப்பிலிருந்து காப்பதற்காகவும் புகையிலை, மது போன்ற பழக்க வழக்கங்களை அழிப்பதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்கள் வரும் பொழுது அதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு நாம் பெரிதும் சிரமப்பட்டோம். எனவே அதுபோன்ற நிலையிலிருந்து காப்பாற்றிக்கொள்வதற்காக ஆராய்ச்சியை அதிகரிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : அனைத்து கிராமங்களிலும் மருத்துவ வசதி - சுகாதாரத்துறை அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.