சென்னை: ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டபொழுது ஒற்றைத்தலைமை வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் காரசார விவாதம் நடத்தினர்.
இதனையடுத்து இன்று(ஜூன் 15) சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் 2ஆவது நாளாக, அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன், தேனி மாவட்டச்செயலாளர் சையது கான் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஒற்றைத் தலைமையைக் கொண்டு வருவது தொடர்பாக மறுபுறம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதன்படி, சென்னையில் உள்ள ஈபிஎஸ் வீட்டில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலுமணி, விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:குடியரசு தலைவர் தேர்தல் - திமுகவின் நிலைப்பாடு என்ன?