ETV Bharat / city

விக்கிரவாண்டியில் சாதி வாக்குகளை அறுவடை செய்யப்போவது யார்?

author img

By

Published : Oct 20, 2019, 11:58 PM IST

Updated : Oct 21, 2019, 8:23 AM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் மீண்டும் திமுக வெற்றிப் பெறுமா அல்லது அதிமுக வசம் தொகுதி செல்லுமா என்ற எதிர்பார்ப்பு அத்தொகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Who is going to harvest the votes of Vanniyar Community in Vikravandi?

வன்னியர்கள்..! விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர்கள்..! கடந்த ஒருமாத காலமாக இவர்களை மையமாக வைத்துதான் விக்கிரவாண்டி தேர்தல்களம் அனல் பறந்தது. வன்னியர்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்து, அதை வெற்றியாக மாற்றபோவது அமைச்சர் சி.வி.சண்முகமா? அல்லது திமுகவைச் சேர்ந்த பொன்முடியா? என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது தொகுதி மக்களிடையே நிலவி வருகிறது.

பொன்முடி வீட்டில் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் தம்பதி, அருகில் அமர்ந்திருக்கும் புகழேந்தி

இந்த சூழலில் தான் முதலடியை வெற்றிக்கரமாக எடுத்து வைத்தது அதிமுக. திமுக மாவட்ட செயலாளர் பொன்முடி, வன்னியர் சமூகத்தினரை மதிப்பதில்லை என்ற கலகக்குரல் மாவட்டத்தில் பரவலாக பேசப்பட்டது. இதனை உறுதிபடுத்தும் விதமாக விக்ரவாண்டி தொகுதி திமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ள நா.புகழேந்தி, பொன்முடி இல்லத்தில் தரையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியானது.

இதைப்பார்த்த தொண்டர்கள் திமுகவின் மாவட்ட பொருளாளராகவும், கழகத்தின் சார்பில் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டுள்ள ஒருவரை, தமக்கு சமமாக உட்கார வைத்து பேசக்கூட பொன்முடிக்கு விருப்பமில்லை. அவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மட்டுமே அவமதிக்கப்படுகிறார் என்று கூறி ஆதங்கப்பட்டனர்.

இந்த பிரச்னை முடிவதற்குள் மீண்டும் மற்றொரு பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அண்மையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வாக்கூர் கிராமத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பொன்முடி, "வன்னிய சமுதாய மக்களுக்கு வாழ்வு கொடுத்தது உதயசூரியன் தான். ஆனால், நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்காமல் துரோகம் செய்கிறீர்கள்" என்று பேசியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக யார் உழைத்தது..! யார் பிழைப்பது..! என்ற தலைப்பில் நகரின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதில் "திமுகவில் உழைக்கும் சமுதாயம் ஒன்று, பிழைக்கும் சமுதாயம் ஒன்று! உழைத்தவர்கள் கீழேயும், பிழைத்தவர்கள் மேலேயும் இருக்க துரோகிகள் என்ற பட்டம் வேறு! வன்னியர்கள் துரோகம் செய்ய துணிந்து இருந்தால் நீங்கள் ஒருவர் கூட MP ஆகி இருக்க மாட்டீர்கள். MT ஆகிஇருப்பீர்கள்" என்ற வசனம் பொருந்திய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சுவரொட்டி அரசியல்

இப்படியாக தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள ஒரு சமூகத்தினரிடையே திமுகவுக்கு சரிவை ஏற்படுத்தும் வேலைகளை கனகச்சிதமாக செய்து முடித்தது எதிர்தரப்பு. இது குறித்து திமுகவின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, "பொன்முடியின் அரசியல் வாழ்க்கையில் இக்கட்டான தருணங்களில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே பொன்முடிக்கு ஆதரவாக இருந்தனர்.

ஜெகத்ரட்சகன்

அதில் ஒருவர் இறந்துபோன விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ ராதாமணி. மற்றொருவர் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நா.புகழேந்தி. அந்த விசுவாசத்தைத்தான் இப்போதும் பொன்முடி திருப்பிக் காட்டுகிறார்" என்று கூறுகின்றனர்.

"சுவரொட்டிகள் ஒட்டுவது, திமுகவை வன்னியர்களுக்கு எதிரான கட்சியாக காட்ட நினைப்பது எல்லாம் அதிமுகவினர்தான்" என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுவரையில் மாவட்ட நிர்வாகிகள் அளவில் மட்டுமே இருந்து வந்த இந்த பிரச்னை எல்லை மீறி செல்வதை அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த பிரச்னைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்மையில் வெளியிட்ட அறிக்கையில்., 'திமுக ஆட்சி அமைந்தவுடன் வன்னியர்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும் ஏ. கோவிந்தசாமி படையாச்சிக்கு மணிமண்டபம் கட்டப்படும்' எனவும் தெரிவித்திருந்தார். இதனால் திமுக நிர்வாகிகள் சற்று ஆறுதல் அடைந்தனர். ஆனால், இந்த ஆறுதல் நீண்ட நாள் நிலைக்கவில்லை. திமுகவுக்கு பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இந்த பிரச்னையை கையில் எடுக்கும் முன்பே, தங்களை வன்னியர் இன மக்களின் பாதுகாவலராக காட்டிக்கொள்ளும் பாமக நிறுவனர் ராமதாஸ் கையில் எடுத்தார்.

"தேர்தலின் போது திமுக கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலைய?" என்று பதில் அறிக்கைவிட்டார். இதனையும் அமைதியாக கைகட்டி வேடிக்கை பார்த்தது அதிமுக. இதனை சமாளிக்கும் விதமாக, இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கும், வன்னிய சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவரான ஏ.கோவிந்தசாமி படையாச்சிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட வன்னிய குல சத்ரியர் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

தொடர்ந்து விக்கிரவாண்டி பரப்புரைக்கு வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், 'இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் குடும்பங்களுக்கும், மாவட்டத்திலுள்ள வன்னியர்களுக்கு எந்தவித நல்லதையும் செய்யாதவர்' ராமதாஸ் என்று ஆதங்கப்பட்டார்.

பாமகவை வளர்த்தெடுத்த காடுவெட்டி குரு மறைந்து அவர் உடலை மருத்துவமனையில் இருந்து எடுத்துச்செல்ல அவர்கள் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. அதை கூட நான் தானே கொடுத்தேன். அப்போது ராமதாஸ் எங்கே போனார்? என்று கேள்வி எழுப்பி பரபரப்பை உண்டாக்கினார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்.

ஜெகத்ரட்சகன் பேச்சு

இறுதியாக நம் ஊரில் பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மோரில் விஷம் வைத்து கொடுத்து தான் உங்களால் வீரப்பனை பிடிக்க முடிந்தது. அதுவரையில் அவரை உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று வீரப்பனின் வீரத்தை பற்றி பேசினார்.

இப்படியாக விக்கிரவாண்டி தொகுதியில் பரப்புரை செய்த அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வன்னியர் இன மக்களின் தலைவர்களின் வீரத்தையும், அவர்களது தியாகத்தையும், இந்த சமுதாயத்திற்கான சலுகைகளை அறிவிக்கும் விதமாகவும் தங்களது தேர்தல் பரப்புரைகளை கையில் எடுத்தனர்.

இப்படியாக அரசியல் தலைவர்கள் வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய எடுத்த முயற்சிகள் எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது வருகிற 24ஆம் தேதி பிற்பகலில் தெரிந்துவிடும். தன் வசமிருந்த தொகுதியை திமுக மீண்டும் வசப்படுத்துமா? அல்லது அதிமுக கைப்பற்றுமா? என்பது தற்போது அனைத்து தரப்பு மக்களின் கேள்வியாக உள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த விஜயகாந்த்!

வன்னியர்கள்..! விக்கிரவாண்டி  இடைத்தேர்தல் முடிவை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர்கள்..! கடந்த ஒருமாத காலமாக இவர்களை மையமாக வைத்துதான் விக்கிரவாண்டி  தேர்தல்களம் அனல் பறந்தது.

வன்னியர்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்து, அதை வெற்றியாக மாற்றபோவது அமைச்சர் சி.வி.சண்முகம்? அல்லது திமுகவைச் சேர்ந்த பொன்முடியா? என்ற எதிர்பார்ப்புதான் தற்போது தொகுதி மக்களிடையே நிலவி வருகிறது. 

இந்த சூழலில் தான் முதலடியை வெற்றிகரமாக எடுத்து வைத்தது அதிமுக...

திமுக மாவட்ட செயலாளர் பொன்முடி, வன்னியர் சமூகத்தினரை மதிப்பதில்லை என்ற கலகக்குரல் மாவட்டத்தில் பரவலாக பேசப்பட்டது.

இதனை உறுதிபடுத்தும் விதமாக விக்ரவாண்டி தொகுதி திமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ள நா.புகழேந்தி, பொன்முடி இல்லத்தில் தரையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியானது. 

இதைபார்த்த தொண்டர்கள் திமுகவின் மாவட்ட பொருளாளராகவும், கழகத்தின் சார்பில் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டுள்ள ஒருவரை, தமக்கு சமமாக உட்கார வைத்து பேசக்கூட பொன்முடிக்கு விருப்பமில்லை. அவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மட்டுமே அவமதிக்கப்படுகிறார் என்று கூறி ஆதங்கப்பட்டனர். 

இந்த பிரச்னை முடிவதற்குள் மீண்டும் மற்றொரு பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

அண்மையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வாக்கூர் கிராமத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பொன்முடி., 

"வன்னிய சமுதாய மக்களுக்கு வாழ்வு கொடுத்தது உதயசூரியன் தான். ஆனால், நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்காமல் துரோகம் செய்கிறீர்கள்" என்று பேசியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக யார் உழைத்தது..! யார் பிழைப்பது..! என்ற தலைப்பில் நகரின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

இதில் "திமுகவில் உழைக்கும் சமுதாயம் ஒன்று... பிழைக்கும் சமுதாயம் ஒன்று! உழைத்தவர்கள் கீழேயும், பிழைத்தவர்கள் மேலேயும் இருக்க துரோகிகள் என்ற பட்டம் வேறு! வன்னியர்கள் துரோகம் செய்ய துணிந்து இருந்தால் நீங்கள் ஒருவர் கூட MP ஆகி இருக்க மாட்டீர்கள். MT ஆகிஇருப்பீர்கள்" என்ற வசனம் பொருந்திய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

இப்படியாக தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள ஒரு சமூகத்தினரிடையே திமுகவுக்கு சரிவை ஏற்படுத்தும் வேலைகளை கனகச்சிதமாக செய்து முடித்தது எதிர்தரப்பு. 

இதுகுறித்து திமுகவின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது., 

"பொன்முடியின் அரசியல் வாழ்க்கையில் இக்கட்டான தருணங்களில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே பொன்முடிக்கு ஆதரவாக இருந்தனர். அதில் ஒருவர் இறந்துபோன விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ ராதாமணி. மற்றொருவர் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நா.புகழேந்தி. 

அந்த விசுவாசத்தைத்தான் இப்போதும் பொன்முடி திருப்பிக் காட்டுகிறார்" என்று கூறுகின்றனர். "சுவரொட்டிகள் ஒட்டுவது, திமுகவை வன்னியர்களுக்கு எதிரான கட்சியாக காட்ட நினைப்பது எல்லாம் அதிமுகவினர்தான்" என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுவரையில் மாவட்ட நிர்வாகிகள் அளவில் மட்டுமே இருந்து வந்த இந்த பிரச்னை எல்லை மீறி செல்வதை அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
இந்த பிரச்னைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அன்மையில் வெளியிட்ட அறிக்கையில்., 'திமுக ஆட்சி அமைந்தவுடன் வன்னியர்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், ஏ. கோவிந்தசாமி படையாச்சிக்கு மணிமண்டபம் கட்டப்படும்' எனவும் தெரிவித்திருந்தார். இதனால் திமுக நிர்வாகிகள் சற்று ஆறுதல் அடைந்தனர். 

ஆனால், இந்த ஆறுதல் நீண்ட நாள் நிலைக்கவில்லை. திமுகவுக்கு பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இந்த பிரச்னையை கையில் எடுக்கும் முன்பே, தங்களை வன்னியர் இன மக்களின் பாதுகாவலராக காட்டிக்கொள்ளும் பாமக நிறுவனர் ராமதாஸ் கையில் எடுத்தார்.

"தேர்தலின் போது திமுக கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலைய?" என்று பதில் அறிக்கைவிட்டார். இதனையும் அமைதியாக கைகட்டி வேடிக்கை பார்த்தது அதிமுக. 

இதனை சமாளிக்கும் விதமாக, இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கும், வன்னிய சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவரான ஏ.கோவிந்தசாமி படையாச்சிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட வன்னிய குல சத்ரியர் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டது.

தொடர்ந்து விக்கிரவாண்டி பிரசாரத்துக்கு வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன்., 'இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் குடும்பங்களுக்கும், மாவட்டத்திலுள்ள வன்னியர்களுக்கு எந்தவித நல்லதையும் செய்யாதவர்' ராமதாஸ் என்று ஆதங்கப்பட்டார்.

பாமகவை வளர்த்தெடுத்த காடுவெட்டி குரு மறைந்து அவர் உடலை மருத்துவமனையில் இருந்து எடுத்துச்செல்ல அவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் தேவைப்பட்டது. அதை கூட நான் தானே கொடுத்தேன். அப்போது ராமதாஸ் எங்கே போனார்? என்று கேள்வி எழுப்பி பரபரப்பை உண்டாக்கினார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்.

இறுதியாக நேம் ஊரில் பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்., மோரில் விஷம் வைத்து கொடுத்து தான் உங்களால் வீரப்பனை பிடிக்க முடிந்தது. அதுவரையில் அவரை உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று வீரப்பனின் வீரத்தை பற்றி பேசினார். 

இப்படியாக விக்ரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்த அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வன்னியர் இன மக்களின் தலைவர்களின் வீரத்தையும், அவர்களது தியாகத்தையும், இந்த சமுதாயத்திற்கான சலுகைகளை அறிவிக்கும் விதமாகவும் தங்களது தேர்தல் பிரசாரங்களை கையில் எடுத்தனர்.

இப்படியாக அரசியல் தலைவர்கள் வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய எடுத்த முயற்சிகள் எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது வருகிற 24ம் தேதி பிற்பகலில் தெரிந்துவிடும்.

தன் வசமிருந்த தொகுதியை திமுக மீண்டும் வயப்படுத்தும? அல்லது அதிமுக கைப்பற்றுமா? என்பது தற்போது அனைத்து தரப்பு மக்களின் கேள்வியாக உள்ளது.

Last Updated : Oct 21, 2019, 8:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.