ETV Bharat / city

நீட் தேர்வில் வெற்றி பெற்ற 63 வயது ஆசிரியருக்கு மருத்துவ சீட் கிடைக்குமா? - Whether find possibilities

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், 63 வயது ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும்படி, மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற 63 வயது ஆசிரியருக்கு மருத்துவ சீட்டு கிடைக்குமா?-  மருத்துவக் கல்வி இயக்குநரகம்!

author img

By

Published : Apr 17, 2022, 1:09 PM IST

சென்னை: சென்னையைச் சேர்ந்த முனுசாமி என்ற 63 வயது அரசுப் பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், நீட் தேர்வில் 348 மதிப்பெண்கள் பெற்ற தனக்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், ஆறாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் அவரது கோரிக்கையை மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு நிராகரித்தது.

இதை எதிர்த்து முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், 1977ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி முடித்த மனுதாரர், மொத்தமாக 11 ஆண்டுகள் அரசுப் பள்ளியில் படித்திருக்கிறார்.

அந்தக் காலகட்டத்தில் 12ஆம் வகுப்புக்கு இணையான படிப்பு இல்லை என்பதாலும் அவருக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என ஆய்வு செய்து விளக்கம் அளிக்கும்படி மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை ஏப்.29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:'இனிமே என் குடும்பத்த நான் எப்படி காப்பாத்துவேன்..?' - அழகர் விழாவில் உயிரிழந்தவரின் மனைவி வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.