ETV Bharat / city

பாஜகவில் குஷ்பூ: பிளான் என்ன? - kushboo

குஷ்பூ முற்போக்கு சிந்தனையாளராக அறியப்படுபவர். ஆனால் பாஜகவோ அடிப்படைவாதங்களில் ஊறிப்போய் இருக்கும் கட்சி என தமிழ்நாட்டில் முத்திரை விழுந்திருக்கிறது. அந்த முத்திரையை மாற்ற குஷ்பூவின் முற்போக்கு முகத்தை அக்கட்சி பயன்படுத்தலாம்.

குஷ்பூ
குஷ்பூ
author img

By

Published : Oct 13, 2020, 5:26 PM IST

காங்கிரஸிலிருந்து விலகி நடிகை குஷ்பூ பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவில் இணைந்த பிறகு சென்னை வந்த அவருக்கு அக்கட்சியினர் பூக்கள் தூவி, மாலை அணிவித்து வரவேற்றனர்.

இதற்கு முன்னர் நடிகை நமிதா, கெளதமி போன்றவர்கள் இணைந்த சமயத்தில் இல்லாத உற்சாகம் பாஜகவினரிடையே காணப்பட்டது. தமிழ்நாடு மக்களுக்கு நன்கு அறிந்தவர், அரசியலையும் பழகியவர், இரண்டு கட்சிகளுக்கு தேர்தல் பரப்புரைகளை செய்தவர் என்பதாலயே அவர்களுக்கு இல்லாத உற்சாக வரவேற்பு குஷ்பூவுக்கு வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது.

பாஜகவில் குஷ்பு பின்னணி என்ன?

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக கடந்த 6 வருடங்களாககுஷ்பு இருந்து வந்தார். அதாவது தேசிய அளவில் குஷ்புவிற்கு முக்கியத்துவம் காங்கிரஸ் கட்சியில் கொடுக்கப்பட்டது.

ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் எம்.பி சீட் எதிர்பார்த்ததாக கூறப்படுகின்றது. மேலும் தேர்தல் சமயத்தில் தன்னை பெரிதாக காங்கிரஸ் கண்டுகொள்ளவிலை என்ற அதிருப்தி அவரிடம் இருந்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து குஷ்பூ பாஜகவில் இணையவிருப்பதாக கடந்த ஒரு மாதமாக பேசப்பட்ட சூழலில் அவர் நேற்று பாஜகவில் இணைந்தார்.

இதற்கு பின்னால் பாஜக மாநில தலைவர் முருகன் பங்கு அதிகம் உள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர். இதையே இன்று குஷ்பு செய்தியாளர் சந்திப்பின்போதும் தெரிவித்தார்.

முருகன் கடந்த மாதத்தில் குஷ்புவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசியதாக சொல்லப்படுகின்றது. இதை அறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் குஷ்பூவை சந்தித்ததாக கூறப்படுகின்றது..

இதனை தொடர்ந்து உ.பி. அரசை கண்டித்து பெரம்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்ற குஷ்பூ பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.

இருப்பினும் குஷ்பூவிற்கு பாஜகவில் தேசிய அளவில் ஒரு பொறுப்பு, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ. சீட், தேர்தலுக்கான செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று முருகன் உறுதி அளித்ததை அடுத்து அவர் பாஜக பக்கம் சாய்ந்ததாக கமலாலய வட்டாரம் கூறுகிறது.

அதுமட்டுமின்றி, குஷ்பூ முற்போக்கு சிந்தனையாளராக அறியப்படுபவர். ஆனால் அடிப்படைவாதங்களில் ஊறிப்போய் இருக்கும் கட்சி என பாஜகவுக்கு தமிழ்நாட்டில் விழுந்திருக்கும் முத்திரையை மாற்ற குஷ்பூவின் முற்போக்கு முகத்தை அக்கட்சி பயன்படுத்தலாம். அதன் வெளிப்பாடுதான், பாஜகவில் இருந்தாலும் தான் ஒரு பெரியாரிய கொள்கைவாதிதான் என்று குஷ்பூ கூறியிருப்பது.

அதேபோல் குஷ்பூ பிறப்பால் இஸ்லாம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை கட்சியில் இணைத்து தேசிய அளவில் ஒரு பதவியையும், எம்.எல்.ஏ சீட்டையும் கொடுப்பதன் மூலம் பாஜக ஹிந்துக்களுக்கான கட்சி மட்டுமில்லை இங்கு இஸ்லாமியர் உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்கும் இடமும், பதவியும் உண்டு என்பதை பாஜக தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்துவேதே அக்கட்சியின் பிளான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

குஷ்பூவை பாஜகவில் இணைத்து அவரது முற்போக்கு முகத்தை பயன்படுத்தினாலும், பத்து வருடங்களில் மூன்றாவது கட்சிக்கு மாறியிருக்கும் அவரை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதும், அவரின் மூலம் தமிழ்நாட்டில் தாமரை மலருமா என்பதும் மிகப்பெரிய சந்தேகமே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மேலும், பாஜகவில் இணைந்தவுடன் குஷ்பூவின் அரசியல் வாழ்வு உயர்வு பெற்று உச்சத்தை அடையும் என்ற முன்முடிவுகளுடன் கூற முடியாது. தமிழ்நாடு காங்கிரஸில் மட்டுமல்ல, தமிழ்நாடு பாஜகவிலும் பல்வேறு கோஷ்டிகள், பிரிவுகள் உள்ளன.

ஒரு பிரபலமான நடிகையாகவும், திரை நட்சத்திரமாகவும் மக்களை ஈர்க்கும் சக்தி கொண்டவர்தான் குஷ்பு என்றாலும், இந்த கவர்ச்சி வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறியே. இதுவரை அவர் பணியாற்றிய பலமான கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸிலேயே இது சாத்தியப்படவில்லை என்பதே யதார்த்தம்.

பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பிரபலமான முகம் ஒன்று தேவைப்படுகிறது என்பதால்தான் குஷ்பூவுக்கு இந்த ஆரவாரமான வரவேற்பு வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் கட்சியில் சேர்ந்த திரை பிரபலங்களுக்கு குஷ்பூ அளவிற்கு ஈர்ப்பும், பேச்சுத்திறனும் இல்லை.

அதேசமயம், பேச்சுத்திறன் இருந்தாலும், திராவிட கட்சியில் ஊறித் திளைத்த தலைவர்கள் போல குஷ்பூ கூர்மையான அரசியல் அறிவு பெற்றவர் அல்ல. அவரின் எதிர்காலம் பாஜகவில் எப்படி இருக்கும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.