ETV Bharat / city

தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? - guidelines for colleges opening

வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

reopening-colleges-in-tamilnadu
reopening-colleges-in-tamilnadu
author img

By

Published : Aug 24, 2021, 11:46 AM IST

சென்னை: கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், இன்று (ஆகஸ்ட் 24) அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு.

  • செப்டம்பர் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால், ஒரு வாரத்திற்கு முன்பே கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்திக்க வேண்டும்.
  • கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.
  • மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • தடுப்பூசி செலுத்தாத பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர்.
  • தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
  • மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வர அவசியமில்லை.
  • நோய்த்தொற்று உள்ள மாணவர்களைக் கண்டறிந்தால், அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • கல்லூரி நுழைவு வாயில்களில் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்து, பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க வேண்டும்.
  • கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், டயர்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க: செப்.1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.