ETV Bharat / city

2.5 ஆண்டுகள் ஆண்களும், 2.5 ஆண்டுகள் பெண்களும் ஆட்சி புரிய வேண்டும்- ஓ. பன்னீர்செல்வம் - eradicate violence against women Seminar

சென்னை : அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் ஆண்கள் இரண்டரை ஆண்டுகளும், பெண்கள் இரண்டரை ஆண்டுகளும் சரி சமமாக ஆட்சி புரிய வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

குற்றங்களை தட்டி கேட்கும் நீதிமன்றமாக மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட வேண்டும்!

author img

By

Published : Dec 11, 2020, 3:42 AM IST

சென்னை ரிப்பன் மாளிகையில் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சார்பில் ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்’ என்ற பெயரில் நேற்று (டிச.10) கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு உரையாற்றினார். கருத்தரங்கில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், “பெண்களை அடிமையாக வைத்திருக்க நினைப்பவர்களால் தான் இந்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடத்தப்படுகிறது. இதை சீர்ப்படுத்த வேண்டியது நமது கடமை. பெண்களுக்கு எதிரான குற்றம் செய்தவர்களுக்கான தண்டனையை அதிகப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர். மகப்பேறு நிதி உதவியை 18 ஆயிரம் ரூபாயாக தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் அந்தந்த பகுதிகளில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தட்டி கேட்கும் நீதிமன்றமாக செயல்பட வேண்டும்.

அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் ஆண்கள் இரண்டரை ஆண்டுகளும், பெண்கள் இரண்டரை ஆண்டுகளும் சரி சமமாக ஆட்சி புரிய வேண்டும். இந்த கருத்தரங்கில் பெண்கள் முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்ட ஆலோசனைகளை செயல்படுத்த முதலமைச்சரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஏ.டி.ஜி.பி சீமா அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : தண்ணீர் வேண்டி சட்டியேந்தி போராடும் விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.