ETV Bharat / city

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 23 உயிர்களை நாம் இழந்துள்ளோம் - அன்புமணி

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழ்நாட்டில் 23 உயிர்களை நாம் இழந்துள்ளோம் என பாமக தலைவர் அன்புமணி ரமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 23 உயிர்களை நாம் இழந்துள்ளோம் -  அன்புமணி
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 23 உயிர்களை நாம் இழந்துள்ளோம் - அன்புமணி
author img

By

Published : Jun 10, 2022, 4:42 PM IST

சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அவசரச் சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,

"ஆன்லைன் சூதாட்டம் என்பது இளைஞர்களின் சாபக்கேடு. 2010 முதல் சிறிய அளவில் இருந்த ஆன்லைன் சூதாட்டம் 2015 காலகட்டங்களில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ராமதாஸ் அவர்களும், நானும் சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகளை பதிவு செய்திருக்கிறோம். ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழ்நாட்டில் 23 உயிர்களை நாம் இழந்துள்ளோம்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணம், நகை உள்ளிட்ட உடமைகளை இழந்து கடன் ஏற்பட்டு சமூகத்தில் ஏற்படும் அவமானம் காரணமாக தான் மட்டுமில்லாமல், தன் குடும்பத்திற்கே விஷம் குடுத்து தற்கொலை செய்யக் கூடிய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. கடந்த ஆண்டு ஆன்லைன் சூதாட்டத்தின் மூலமாக 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அந்நிறுவனம் சம்பாதித்துள்ளது.

அதில் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியாக 3,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு அந்நிறுவனத்தின் வருவாய் 15 ஆயிரம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்னும் இரண்டு ஆண்டு காலத்தில் 40 ஆயிரம் கோடியாக உயரும் என்றும் சொல்கிறார்கள்.

இந்த 40,000 கோடி யாருடைய பணம்?, சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களுடைய பணம். நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு இரண்டு வாரம் வரை காத்திருக்காமல் 2 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு உடனடியாக அறிக்கையை சமர்ப்பித்து அவசரச்சட்டம் கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் போராட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி ஓட்டு அரசியலுக்காக இதை செய்யவில்லை மக்களின் நலனுக்காக தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணக்கூடிய வகையில் பாமகவின் அடுத்தடுத்த போராட்டங்கள் அமையும்" எனக் கூறினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் ஆயிரத்திர்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு, மற்றும் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் தொடரும் உயிரிழப்புகளும்... மீளும் வழிமுறைகளும்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.