ETV Bharat / city

தேர்தலின்போது அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன - முதலமைச்சர் அறிவிப்பு - தேர்தலின்போது அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளன

சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என 110-விதியின் கீழ் செய்து தரப்பட்ட பொருளாதார முன்னேற்ற நலத்திட்ட உதவிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் (மார்ச் 23) இன்று பட்டியலாக அறிவித்துள்ளார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்
author img

By

Published : Mar 23, 2022, 7:16 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் பட்ஜெட் மீதான மூன்றாம் நாள் விவாதம் (மார்ச் 23) இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்தும் விதி 110இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிக்கை அளித்தார். அதில்,

வெள்ளை அறிக்கைக்குச் சமம்: 'தமிழ்நாடு சட்டப்பேரவையிலும், பொதுவெளியிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், அவற்றை இந்த அரசு நிறைவேற்றி வருவது குறித்தும் சில கருத்துகளும், விமர்சனங்களும் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டு வருவதால், அவை குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கும், பொது மக்களுக்கும் இப்பொருள் குறித்த உண்மை நிலையை விளக்கும் வகையில், உங்கள் அனுமதியுடன் இந்த அவையில் ஒரு வெள்ளை அறிக்கைக்குச் சமமான, ஒரு அறிக்கையை சட்டப் பேரவை விதி 110-ன்கீழ் இப்பொழுது நான் வெளியிட விரும்புகிறேன்.

5 முக்கிய அரசாணைகள்: இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதில் சொல்லப்படாத நலத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் மக்கள் அளித்த மாபெரும் வெற்றியைப் பெற்று அமைந்துள்ள இந்த அரசு, அதனை நிறைவேற்ற உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக, கடந்த மே 7ஆம் தேதியன்று பதவியேற்ற ஒரு சில மணித் துளிகளிலேயே தமிழ்நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணைகளை நான் வெளியிட்டேன்.

  1. 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4,000 கரோனா நிவாரண நிதி.
  2. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு.
  3. மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம்.
  4. மக்களின் மனுக்களின் மீது தீர்வு காண “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறை.
  5. தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான அனைத்து செலவினங்களையும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் அரசே ஏற்பு.

இந்த ஐந்தில், முதல் நான்குமே திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தவை ஆகும்.

கடந்த 10 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்ட முக்கியமான சில வாக்குறுதிகள் பின்வருமாறு,

* வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், முதன்முறையாக வேளாண்மைக்கென்று தனியாக இரண்டு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
* கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் சுமார் 55 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது.
* கூட்டுறவு அமைப்புகள் மூலம் வழங்கப்பட்ட 5 சவரனுக்குட்பட்ட ரூபாய் 5 ஆயிரத்து 250 கோடி நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
* பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு.
* ஊரகப் பகுதிகளில் 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைத் செயல்படுத்துவது.

* 'நமக்கு நாமே’ திட்டம், உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுவது.
*"இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம்" என்ற உன்னதத் திட்டத்தை செயல்படுத்துவது.
* அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறக்கூடிய வகையில் புனரமைத்தல் மற்றும் மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்தல்.
* பத்திரிகையாளர்கள், இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், மீத்தேன்/நியூட்ரினோ மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் எட்டுவழிச்சாலைத் திட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள், பொதுமக்கள் மீது போடப்பட்ட 5,570 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
* மூன்று வேளாண் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேற்படி மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் ஒன்றிய அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
* NEET தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவைப் சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.
* கரோனா சிகிச்சை பணியில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் கரோனா இழப்பீட்டுத் தொகை.
அதேபோல், கரோனா நோய்த் தொற்றால் காவல் துறையில் உயிரிழந்த காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வீதம் நிவாரணத் தொகை.
* குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கக்கூடிய தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குதல்.
* தமிழ்நாடு அரசிற்கு ஆலோசனைகளை வழங்கிட ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது.
* பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவித் தொகை 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.
* தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் மொழி தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* ஸ்டெர்லைட் சம்பவம் குறித்து தவறாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
*மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது.

அரசின் அறிவிப்புகளில் 208 தேர்தல் வாக்குறுதிகள்: இந்த மாமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் 52 தேர்தல் வாக்குறுதிகளும்; ஆளுநர் அவர்களின் உரை குறித்த என்னுடைய பதிலுரையில் 1 வாக்குறுதியும்; நிதியமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 2021-22ஆம் ஆண்டு மற்றும் 2022-23ஆம் ஆண்டுக்கான வரவு, செலவு அறிக்கையில் 33 வாக்குறுதிகளும்; வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்களால் வேளாண்மைக்காக தாக்கல் செய்யப்பட்ட 2021-22ஆம் ஆண்டு மற்றும் 2022-23ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் 21 வாக்குறுதிகளும்; விதி 110இன் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கையில் 3 வாக்குறுதிகளும்; அவரவர் துறை சார்பாக அமைச்சர் பெருமக்கள் வெளியிட்ட அறிவிப்புகளில் 78 வாக்குறுதிகளும்; இதர அறிவிப்புகளில் 10 வாக்குறுதிகளும், நேரடியாக நிறைவேற்றப்பட்ட 10 வாக்குறுதிகளும் என இதுவரை மொத்தம் 208 தேர்தல் வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்திற்கும் உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, அரசாணைகள் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் முறையாகவும், முழுமையாகவும் செயல்படுத்தப்படுவதை இந்த அரசு முனைப்புடன் கண்காணித்து வருகிறது.

பொருளாதார முன்னேற்ற நலத்திட்ட உதவிகள்: இந்த அரசு பதவியேற்று, இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டங்கள், அரசு விழாக்கள் போன்றவற்றில் குறிப்பிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட வாக்குறுதிகளைத் தவிர, தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல்வேறு கொள்கை அளவிலான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில், தமிழ்நாடு மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பலவகையான நலத்திட்ட உதவிகள் என சொல்லாதவற்றையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

பள்ளிக்கு வந்து கல்வி கற்று வந்த மாணவர்களை வீட்டுக்குள் முடக்கி வைத்த கரோனா பெருந்தொற்று குழந்தைகளின் கல்வியை மட்டுமின்றி அவர்களின் மனதையும் பாதித்துவிட்டது. இந்தப் பாதிப்பை சரி செய்யக்கூடிய விதமாக தனித்துவம் கொண்ட ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு வகுப்பறையைப் பள்ளிகளுக்கு வெளியேயும் நீட்டிக்கச் செய்யும் மகத்தான முயற்சியை இந்த அரசு மேற்கொண்டது.

இன்னுயிர் காக்கும் திட்டம்: மாநிலத்தில் தொற்றாத நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக இல்லங்களுக்கே சென்று, அனைவருக்கும் நல வாழ்வு என்கிற உயரிய நோக்கத்தினைச் செயல்படுத்தும் வகையில், “மக்களைத் தேடி மருத்துவம்” என்ற புதிய திட்டத்தை செயல்படுத்துவது. தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பையும், சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதையும் உறுதி செய்யக்கூடிய உயரிய நோக்கத்தோடு “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48” என்ற உயிர் காக்கும் திட்டத்தை செயல்படுத்துவது;

* தமிழ்நாட்டில் உள்ள சிற்றூர்கள் அனைத்தும் அவற்றின் முழு ஆற்றலுக்கேற்ப வளர்ச்சியடைந்து செழிக்க வேண்டும் என்கின்ற நோக்கில் ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது;

*இளைஞர்களின் தனித்துவத் திறன்களை மேம்படுத்தி அவர்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரக்கூடிய, எனது கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்துவது;

* அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து தொழிற்கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில், ஏழரை விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்தல்.
* திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை.
* கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி, கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்கள் அரசே ஏற்பு.

*கரோனாவால் தந்தை அல்லது தாயை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை.

தன்னாட்சி அதிகாரத்தில் தனிச் சட்டம்: தமிழ்நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர் நலனைப் பேணிட, வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கச் சட்டம் இயற்றப்பட்டு, ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

முன்களப் பணியாளராக பத்திரிகையாளர்கள்: ஊடகத்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் “முன்களப் பணியாளர்”களாக அறிவிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கான சிறப்பு ஊக்கத்தொகை 5,000 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது. கரோனா தொற்றால் மரணமடைந்த அங்கீகரிக்கப்பட்ட ஊடகத் துறையினர்களுக்கான இழப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இவ்வாறாக சட்டப்பேரவைத்தேர்தலின்போது, மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன’ என்றார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதையும் படிங்க: மருதமலை முருகன் கோயிலுக்கு லிப்ட் வசதி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.