மற்ற முக்கிய கூட்டணிக் கட்சிகள் அனைத்துடனும், திமுக தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்ட நிலையில், கடும் இழுபறியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இன்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சம்பத், சௌந்தர்ராஜன் ஆகியோர் சந்தத்தனர். அதன்பின், திமுக கூட்டணியில் அக்கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன், “சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை முறியடிக்க மதச்சார்பற்ற கட்சிகளுடன் தேர்தலை சந்திப்பது என முடிவெடுத்து, அதன்படி முடிவு எட்டப்பட்டிருக்கிறது. கூடுதல் இடங்கள் திமுக ஒதுக்கும் என எதிர்பார்த்தோம். அதேவேளையில், இதனால் எந்த சிறு பிரச்சனையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் உறுதியாக இருந்தோம். ஆக, அரசியல் கடமையை விட்டுவிட முடியாது என்ற அடிப்படையில் உடன்பாட்டை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: அதிமுக அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்